போர் நிறுத்த ஒப்பந்தம்; துருக்கி ஒப்புதல்

  • In General
  • October 18, 2019
  • 187 Views
போர் நிறுத்த ஒப்பந்தம்; துருக்கி ஒப்புதல்

துருக்கி:

குர்துக்களுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திய நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்திற்கு துருக்கி ஒப்புதல் அளித்துள்ளது.

சிரியாவில் பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வந்த குர்த்துக்களுக்கு ஆதரவாக, அமெரிக்கப் படைகள் களமிறங்கின. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென படைகளை வாபஸ் பெற்றதன் காரணமாக குர்துக்கள் மீது துருக்கி தாக்குதல் நடத்த தொடங்கியது.

துருக்கியின் இந்த செயலால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது. இதனையடுத்து, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் துருக்கி நாட்டுக்கு சென்று அதிபர் யிப் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தனார்.

இந்நிலையில், 5 நாட்கள் போர் நிறுத்தம் செய்வதாக துருக்கி ஒப்புதல் தெரிவித்துள்ளது. குர்து படைகளும் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்