இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்த பாக்., முடிவு

இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்த பாக்., முடிவு

இஸ்லாமாபாத்:

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக, இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்த பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில், பிரதமர் அலுவலகத்தில் இன்று தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. இதில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370ஐ நீக்கியது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், இந்தியாவுடனான ராஜதந்திர உறவுகளை குறைத்தல், இருதரப்பு வர்த்தகத்தை நிறுத்துதல், இருதரப்பு ஆலோசனையை மதிப்பாய்வு செய்தல் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகா எல்லை மற்றும் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்படும். பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரை திருப்பி அனுப்ப முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என  பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்