பேனர் இல்லை.. மரக்கன்று வழங்கிய சூர்யா ரசிகர்கள்

பேனர் இல்லை.. மரக்கன்று வழங்கிய சூர்யா ரசிகர்கள்

சென்னை:
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் காப்பான். இந்தப்படம் நேற்று முதல் உலகம் முழுவதும் ரிலீசானது.

ஒரு நடிகரின் படம் வெளியாகும் முன்னரே அந்த நடிகருக்கு ரசிகர்கள் பேனர்கள் வைத்து விடுவார்கள். அது மட்டும் இன்றி, போஸ்டர்கள் பொது இடங்களில் ஒட்டி பொதுமக்களுக்கு இடைஞ்சல் கொடுப்பார்கள்.

ஆனால் தற்போது அந்த கலாச்சாரம் மாறி வருகிறது என்றே சொல்லலாம். கரூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றம் சார்பில், கரூரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் காப்பான் படம் வெளியானது.

இந்த படத்தை பார்க்க வந்தவர்களுக்கு ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கினர்.

இதனை படம் பார்க்க வந்தவர்களும் ஆர்வமாக பெற்று சென்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்