கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது.. உச்சநீதிமன்றம்.!

கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது.. உச்சநீதிமன்றம்.!

டெல்லி:

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து முடிவு எடுக்க கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கர்நாடகவில் 15 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினர்.

ஆனால், ராஜினாமா கடிதத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் சபாநாயகர் எடுக்காமல் இருந்தார்.

இதனால் ராஜினாமா அளித்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் சபாநாயகர் தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

இந்நிலையில், இன்று ஜுலை 17ம் தேதி, தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் எம்.எல்.ஏ.க்களை விட சபாநாயகர் தான் முக்கியம். ராஜினாமா பற்றி முடிவு செய்ய சபாநாயகரே முடிவு எடுக்கலாம்.

மேலும், ராஜினாமா பற்றி முடிவு செய்வதற்கு சபாநாயகருக்கு அவகாசம் அளிக்க வேண்டும். நாளை 18ம் தேதி நடைபெறும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவிட முடியாது. விருப்பப்பட்டால் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்