சுந்தர் பிச்சையின் சம்பளம் இவ்வளவா!

  • In General
  • December 21, 2019
  • 168 Views
சுந்தர் பிச்சையின் சம்பளம் இவ்வளவா!

கலிபோர்னியா:

தமிழ்நாட்டை சேர்ந்த கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சையின் சம்பள விபரத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த 204ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை, குரோம் மற்றும் கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்க தலைமை தாங்கியவர்.

பின்னர், 2015ம் ஆண்டு கூகுளின் சிஇஓ., வாக பதவி உயர்வு பெற்றார். கூகுளின் தாய் நிறுவனமான அப்பபேட்டின் சிஇஓ பொறுப்பையும் கூடுதலாக சமீபத்தில் ஏற்றார்.

இந்நிலையில், கூகுளின் தாய் நிறுவனமான அல்பபெட், அமெரிக்க பங்கு சந்தை ஆணையத்துக்கு அளித்துள்ள தகவலில், வரும் 2020ம் ஆண்டு முதல் சுந்தர் பிச்சைக்கு 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளமாகவும், 240 மில்லியன் மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த மொத்த தொகையான 242 மில்லியன் டாலர்கள் என்பது, இந்திய மதிப்பில் சுமார் 1700 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்