ரூ.405 கோடியை வாங்க மறுத்த சுந்தர் பிச்சை!

ரூ.405 கோடியை வாங்க மறுத்த சுந்தர் பிச்சை!

வாஷிங்டன்:

கூகுள் நிறுவனம் சுந்தர் பிச்சைக்கு 58 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.405 கோடி வழங்க முன்வந்தது. ஆனால், இந்தப் பங்குகளைப் பெற சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார்.

கூகுள் நிறுவனத்தின் கடைநிலை ஊழியராக சேர்ந்த இந்தியரும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவரான சுந்தர் பிச்சை தற்போது அந்த நிறுவனத்தின் சிஇஓ.,வாக பதவி வகித்து வருகிறார்.

கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சையின் உழைப்பும், தனித்திறமையையும் கொண்ட பணியும் இந்த நிறுவனம் அடுத்த நிலைக்கு செல்ல காரணமாக இருந்தது. கூகுள் நிறுவன புதிய சர்ச் இன்ஜின் உருவாக காரணமானவரும் சுந்தர் பிச்சைதான்.

இவரின் திறமையை கண்ட பல நிறுவனங்கள் ஊதிய உயர்வுடன் கூடிய தலைமை பொறுப்பேற்க அழைப்பு விடுத்த நிலையிலும், தான் கூகுள் நிறுவனத்தை விட்டு செல்லமாட்டேன்; எனக்கும் பல கனவுகள் உள்ளது என தெரிவித்தார்.

இதற்கு பரிகாரமாக கூகுள் நிறுவனம் பல வெகுமதிகளையும் ஊதிய உயர்வுகளையும் வாரி வழங்கியது. 2014ம் ஆண்டு ரூ.1,750 கோடி மதிப்பு கொண்ட பங்குகளையும், 2015ம் ஆண்டு ரூ.700 கோடி மதிப்புள்ள பங்குகள், 2016ம் ஆண்டு மேலும் ரூ.1,400 கோடி மதிப்பு கொண்ட பங்குகளை அவர் பெற்றார். இதனால் கூகுள் பங்குகளின் மதிப்பு உயர்ந்தும் உள்ளது.

இதனைத்தொடர்ந்து, கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், கடந்த 2017, 2018ம் ஆண்டு சுந்தர் பிச்சைக்கு 58 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.405 கோடி வழங்க முன்வந்தது. ஆனால், இந்தப் பங்குகளைப் பெற சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார். மேலும், தன்னிடம் போதுமான செல்வம் சேர்ந்திருப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிலிக்கான் வேலியில் உள்ள மற்றொரு நிறுவனத்துக்கு தலைமை பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதுகுறித்து கூகுள் செய்தி தொடர்பாளர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குறித்து எந்த கருத்தையும் பொதுவெளியில் தெரிவிக்கக்கூடாது என்பது நிறுவனத்தின் கொள்கை என தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்