11 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும்

11 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும். வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டும் என்பதால் பகல் 11.00 மணி முதல் மதியம் 03.00 மணிவரை வெளியே செல்ல வேண்டாம். திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நெல்லையிலும் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டும். இரண்டு நாட்களுக்குப் பிறகு வெயில் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். வெப்பச்சலனத்தால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி தென்தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.அதிகபட்சமாக நீலகிரியில் 7, எடப்பாடியில் 5 செ.மீ மழை பதிவானது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்