குடும்பத்தகறாறு; மனைவி தீக்குளிப்பு

குடும்பத்தகறாறு; மனைவி தீக்குளிப்பு

ஒசூர்:

ஒசூர் அருகே குடிபோதை கணவனால் குடும்பத்தகறாரில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்த மனைவி, காப்பாற்ற சென்ற கணவணும் படுகாயம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஓசூர் அருகே பேளகொண்டப்பள்ளி கிராமத்தில் குடும்பத்தகறாரில் மனைவி உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார். அவரை காப்பாற்ற சென்ற கணவரும் தீயில் கருகி பலத்த காயங்கள் அடைந்தார். இதனையடுத்து இருவரும் மீட்கப்பட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஒசூர் அருகேயுள்ள தேன்கனிகோட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (38) இவரது மனைவி மல்லிகா (32) இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் என 3 பிள்ளைகள் உள்ளனர். வெங்கடேஷ் ஒசூர் அருகேயுள்ள பேளகொண்டப்பள்ளி கிராமத்தில் ஒரு ஒட்டலில் சர்வராக வேலை செய்து வருவதால் அங்கு வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவி இருவரும் வாழ்ந்து வருகின்றனர். இதனால் தங்களது 3 பிள்ளைகளையும் ஜவளகிரி கிராமத்திலுள்ள மல்லிகாவின் பெற்றோர் வீட்டில் அவர்களது பராமரிப்பில் வளர்க்க விட்டுள்ளனர்.

வெங்கடேஷ் மது அருந்தும் பழக்கம் உடையவர், தினந்தோறும் மது அருந்திவிட்டு அவர் வீட்டிற்கு வரும்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று இரவும் வெங்கடேஷ் வழக்கப்போல மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் வேதனையடைந்த மல்லிகா வீட்டிலிருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துள்ளார். இதில் அவரது உடலில் தீப்பற்றி எரிந்துள்ளது.

மல்லிகா தீயில் எரிவதை பார்த்த வெங்கடேஷ் குடிபோதையில் அவரை காப்பாற்ற சென்றுள்ளார். அப்போது அவரும் தீயில் கருகியுள்ளார். இருவரின் அலரல் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பலத்தகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மல்லிகா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் ஒசூர் ஜே.எம்.2 நீதிமன்ற நீதிபதி முனுசாமியிடம் தான் தீக்குளித்தது குறித்து வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து மருத்துவர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்