வர்த்தக உறவில் தடுமாற்றம் ஏற்பட்டாலும், இந்தியாவிடம் டன் கணக்கில் சர்க்கரை இறக்குமதி செய்யும் மலேசியா

வர்த்தக உறவில் தடுமாற்றம் ஏற்பட்டாலும், இந்தியாவிடம் டன் கணக்கில் சர்க்கரை இறக்குமதி செய்யும் மலேசியா

கடந்த சில மாதங்களாக இந்தியா-மலேசியா இடையேயான வர்த்தக உறவில் தடுமாற்றம் ஏற்பட்டாலும், மலேசியா இந்த ஆண்டில் மட்டும் சாதனை அளவாக இதுவரை 3 லட்சத்து 24 ஆயிரத்து 405 டன் சர்க்கரையை இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

மலேசியா இந்த வேகத்தில் இறக்குமதி செய்தால், அது 4 லட்சம் டன்களை கடந்து விடும் என அகில இந்திய சர்க்கரை வர்த்தகர் சங்க தலைவர் பிரபுல் விதாலானி தெரிவித்துள்ளார். மலேசியாவின் மிகப்பெரிய பாமாயில் இறக்குமதியாளராக இந்தியா இருந்தது.

ஆனால், 370 ஆவது பிரிவு, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை குறித்து முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது நடத்திய விமர்சனத்தை தொடர்ந்து மலேசிய பாமாயில் இறக்குமதி குறைக்கப்பட்டது.இந்த நிலையிலும் மலேசியா இந்திய சர்க்கரையை பெருமளவில் இறக்குமதி செய்துள்ளதை அடுத்து இரு நாட்டு வர்த்தக உறவுகள் விரைவில் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்