வில்வித்தை பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு

வில்வித்தை பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு

ஒசூர்:

ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானத்தில், வில்வித்தை பயிற்சிக்கு மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட வில்வித்தை அசோசியேஷன் சார்பில், வில்வித்தை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் வில்வித்தை குழுக்கள் தேர்வு, ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் ஹரிஹரசுதன், தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர், 9, 14, 17, 19, 21 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியரை, வில்வித்தை பயிற்சிக்கு குழுக்களாக தேர்வு செய்தனர். ஒவ்வொரு பிரிவிலும் மாணவ, மாணவியர் தலா, 25 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட பின், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க செய்து, அதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியரை மாநில, தேசிய அளவிலான போட்டிகள் பங்கெடுக்க தேவையான ஏற்பாடுகளை செய்வதாக, வில்வித்தை அசோசியேஷன் நிர்வாகிகள் கூறினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்