தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்த மாணவி

தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்த மாணவி

புதுச்சேரி:

தலையில் இருந்த ஹிஜாப்பை அகற்ற வற்புறுத்தியதால் தங்க பதக்கத்தை வாங்க மாணவி ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 27வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.

மேலும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடி, பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில், தகவல் தொடர்பியல் துறையில் முதுநிலைப் பட்டத்தில் தங்கம் வென்ற கேரள இஸ்லாமிய மாணவி ரபீஹாவின் தலையில் இருந்த ஹிஜாப்பை அகற்றும்படி பாதுகாப்பு அதிகாரிகள் வற்புறுத்தினர்.

ஆனால், அதை ஏற்க மறுத்த மாணவி ரபீஹா, வேண்டுமானால் என்னை இன்னொரு முறை சோதனை செய்து கொள்ளுங்கள். நான் ஏன் அதைக் கழற்ற வேண்டும் என கேள்வி எழுப்பினார். ஆனால், அவர் கோஷம் போட்டுவிடுவார் என்று நினைத்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய மாணவி ரபீஹா, கேரளாவை சேர்ந்த என்னை உடனே வெளியே அழைத்து வந்துவிட்டார்கள். எதற்காக என்னை வெளியேற்றினார்கள் என்று தெரியவில்லை. குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாகப் போராட்டத்தில் மாணவர்கள் அமைதியாக நடத்தி வருகின்றனர். என்னை வெளியேற்றி தனியாக அமரவைத்தது அவமானப்படுத்தியதை மேடையில் தெரிவித்து, எனது தங்கப் பதக்கத்தை வாங்க மறுத்து விட்டேன். பட்டத்தை மட்டும் பெற்றேன். குடியரசுத் தலைவர் அங்கிருந்து சென்றபிறகே என்னை உள்ளே அனுமதித்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எனது சகோதர சகோதரிகளுக்காக அந்த மெடலை நான் வாங்கவில்லை என்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்