தேர்தல் செயலர் மாற்றம்: ஸ்டாலின் கண்டனம்

  • In Chennai
  • November 14, 2019
  • 179 Views
தேர்தல் செயலர் மாற்றம்: ஸ்டாலின் கண்டனம்

சென்னை:

தமிழக தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமி மாற்றத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்? எனவும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விசுவாசமாகப் பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் மாற்றம் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடவா?-என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்