‘பத்தாத பட்ஜெட்’; ஸ்டாலின் விமர்சனம்

  • In Chennai
  • February 14, 2020
  • 283 Views
‘பத்தாத பட்ஜெட்’; ஸ்டாலின் விமர்சனம்

சென்னை:

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து ‘பத்தாத பட்ஜெட்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 பேரில் ஒருவரான பன்னீர்செல்வம் நிதி நிலை அறிக்கையை வாசித்துள்ளார். இது யாரு க்கும் பத்தாத பட்ஜெட் என அவர் தெரிவித்தார்.

மேலும், மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 159 நிமிடங்கள் வாசித்தார். இந்த பட்ஜெட்டை பன்னீர்செல்வம் 196 நிமிடங்கள் வாசித்துள்ளார். இதில் கூட பாஜக அரசைதான் அதிமுக அரசு பின்பற்றுகிறது என அவர் விமர்சித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்