ரஜினிகாந்த் யோசித்து பேச வேண்டும்

  • In Chennai
  • January 21, 2020
  • 193 Views
ரஜினிகாந்த் யோசித்து பேச வேண்டும்

சென்னை:

பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் யோசித்து பேச வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக செயற்குழு கூட்டம் சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை தேடித்தந்த மக்களுக்கு நன்றியை தெரிவிப்பதாகவும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குரிமை வழங்கும் அதிமுகவின் நாடகத்தை எதிர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து கண்டனம் தெரிவித்து என்ன செய்யலாம் என வரும் 24ம் தேதி திமுக கூட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெரியார் குறித்த பேச்சுக்கு ரஜினி பேசியிறுப்பது குறித்து கூறுகையில், நண்பர் ரஜினிகாந்த் நடிகர் தான்; அரசியல்வாதியல்ல. 95 ஆண்டுகளாக தமிழ் சமுதாயத்துக்கு சேவை செய்த பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் யோசித்து பேச வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்