20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி!

  • In Sports
  • June 22, 2019
  • 162 Views
20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி!

லீட்ஸ்:

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி 232 ரன்களை குவித்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 27 லீக் ஆட்டமாக இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு விளையாடியது. இதில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக மேத்திவ்ஸ் 85 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் விளையாடினார்.

இதனைத்தொடர்ந்து 233 ரன்களை இலக்காகக்கொண்டு விளையாடி இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களே எடுத்தது.

20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 82 ரன்களை எடுத்து அவுட்டாகமல் இருந்தார். மலிங்கா அபாரமான பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்