7 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்திடம் போராடி தோற்ற CSK..!

  • In Sports
  • October 3, 2020
  • 8 Views
7 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்திடம் போராடி தோற்ற CSK..!

சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. ஹைதராபாத்திடம் வீழ்ந்தது சென்னை..!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது..!

2020 IPL தொடரின் 14-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 164 ரன்களை எடுத்தது. ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சீரிய இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். வார்னர் (28 ரன்கள்), மணீஷ் பாண்டே (29 ரன்கள்), sபிரியம் கார்க் (51 ரன்கள்), அபிஷேக் ஷர்மா (31 ரன்கள்) எடுத்திருந்தனர். பிரியம் கார்க் நிலைத்து நின்று அரைசதம் கடந்து ஹைதராபாத் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனையடுத்து தோனி தலைமையிலான சென்னை அணி 164 ரன்களை சேஸ் செய்யும் முனைப்பில் களத்தில் இறங்கியது.

ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது சென்னை. கிரீஸுக்கு வருவதும் பெவிலியன் திரும்புவதுமாக இருந்தனர் சென்னை பேட்ஸ்மேன்கள். ஜடேஜா 50 ரன்களை குவித்து ஆறுதல் கொடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி ஹைதராபாத் அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது அந்த அணியின் மூன்றாவது தொடர் தோல்வி ஆகும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்