மலடு நீக்க சிறப்பு சிகிச்சை.. இண்டூர் கால்நடை மருத்துவர் அசத்தல்

மலடு நீக்க சிறப்பு சிகிச்சை.. இண்டூர் கால்நடை மருத்துவர் அசத்தல்

இண்டூர்:
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் இண்டூர் கால்நடை மருத்துவமனையில் மருத்துவர் கே.தசரதன் பசுக்களுக்கு மலடு நீக்க சிறப்பு சிகிச்சை மேற்கொண்டார்.

இண்டூர் கால்நடை மருந்தகத்தில் 2018, 19ம் ஆண்டு முதல் நத்த அள்ளி மட்டும் தளவாய் அள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்ப்டது.

விவசாயிகளுக்கு நீடித்த நிலையான மானாவாரி வளர்ச்சித் திட்டம் (MSDA PHASE ) திட்டத்தின் மூலமாக சினை பிடிக்காத மாடுகள், பருவத்திற்கு வராத பசு, கர்ப்பபை கோளாறு மற்றும் கருமுட்டை கோளாறு உள்ளிட்ட அனைத்துக்கும் தனித்துவமான முறையில் சிறப்பு சிகிச்சையான புரோஜெஸ்ட்ரான் பேண்டேஜ் முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிகிச்சையானது பசுவின் முன்னங் காலில் உள்ள முடிகளை அகற்றிய பின்னர் பேண்டேஜ் ஒட்டப்படுகிறது.

பின்னர் ஏழாவது நாளில் அந்த கட்டினை நீக்கி ஒன்பதாவது நாள் மற்றும் பத்தாவது நாளில் அந்த கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்படுகிறது.

இது போன்ற கால்நடைகளுக்கு இம்முறை சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்று கால்நடை மருத்துவர் கே.தசரதன் கூறியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்