படிகளில் அமர்ந்தால் ரூ.31,000 அபராதம்

படிகளில் அமர்ந்தால் ரூ.31,000 அபராதம்

ரோம்:

இத்தாலியின் புராதன சின்னமான ஸ்பானிஷ் படிகளில் சுற்றுலாப்பயணிகள் அமர்ந்தால் ரூ.31,000 அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் மற்றும் சிறப்பான கட்டிடங்களை கொண்டது ரோம் நகரம். இந்த நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புராதன சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அந்நாட்டு அரசு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த 1725ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தாலோ, அங்கு உணவு உள்ளிட்ட குப்பைகளை கொட்டினாலோ அதிகபட்சமாக 400 யூரோ, அதாவது இந்தியா மதிப்பில் சுமார் 31 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என இத்தாலி எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்