இலங்கைக்கு எதிராக தென்னாப்ரிக்கா வெற்றி!

  • In Sports
  • June 28, 2019
  • 178 Views
இலங்கைக்கு எதிராக தென்னாப்ரிக்கா வெற்றி!

செஸ்டர் லீ ஸ்ரீட்:

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக தென்னாப்ரிக்கா வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 35வது லீக் ஆட்டம் செஸ்டர் லீ ஸ்ரீட்டில் நடைபெறுகிறது. இதில் இலங்கை அணியும் தென்னாப்ரிக்கா அணியும் மோதின.

முதலில் டாஸ் வென்ற தென்னாப்ரிகா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய இலங்கை அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்கள் எடுத்தது.

இதனைத்தொடர்ந்து 204 ரன்களை இலக்காக்கொண்டு விளையாடி தென்னாப்ரிக்கா அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றுள்ளது.

அதிகபட்சமாக டூப்ளிசிஸ் 83 ரன்களும், ஆம்லா 72 ரன்களும் எடுத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்