தென்னாப்பிரிக்கா – வெஸ்ட்இண்டீஸ் போட்டி ரத்து..!

  • In Sports
  • June 10, 2019
  • 238 Views
தென்னாப்பிரிக்கா – வெஸ்ட்இண்டீஸ் போட்டி ரத்து..!

சவுத்தாம்டன்:

இந்த ஆண்டின் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இன்றைய போட்டியில், 15 லீக் ஆட்டமாக தென்னாப்பிரிக்காவுடன் வெஸ்ட்இண்டீஸ் அணி மோதியது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ், பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, தென்னாப்ரிக்கா அணி பேட்டிங்கில் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் ஆம்லா களமிறங்கினர். ஆம்லா 7 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து கெயிலின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். இதனைத்தொடர்ந்து மார்க்ரம் 10 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து காட்ரெல் பந்து வீச்சில் கேட்ச்சாகி அவுட்டானார். அடுத்து வந்த டூப்ளிசிஸ் ரன் ஏதும் எடுக்காமலும், டி காக் 17 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

தென்னாப்பிரிக்கா அணி 7.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது. போட்டி விதிகளின் படி இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.

புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்கா 9வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் அணி 5வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்