தென் தமிழகத்தில் மிக கனமழை

தென் தமிழகத்தில் மிக கனமழை

சென்னை:

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீண்டும் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், அது மேற்கு திசை காற்றின் சாதக போக்கின் காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்