12 வயது இந்திய சிறுமி உலக சாதனை

12 வயது இந்திய சிறுமி உலக சாதனை

மும்பை:

தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவில் உள்ள அக்கோன்கோகுவா மலை சிகர¬த்தை அடைந்து 12 வயதான இந்திய சிறுமி உலக சாதனை படைத்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் உள்ள மேற்கத்திய நாடுகளிலேயே மிக உயரமான மலையானது அக்கோன்கோகுவா. இது கடல் மட்டத்திலிருந்து 6,962 மீட்டர் உயரம் கொண்டது.

மும்பையை சேர்ந்த காம்யா கார்த்திகேயன் என்பவர் இந்த சிகரத்தை அடைந்து உலக சாதனை படைத்துள்ளார். இவர் நேவி சில்ட்ரன் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சாதனையின் மூலம் உலகிலேயே மிக குறைந்த வயதில் இந்த சிகரத்தின் உச்சியை அடைந்த சிறுமி என்ற பெருமையை காம்யா பெற்றுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்