2 ஏவுகணை தாக்குதலில் தப்பித்த மெக்கா..! சவுதியில் உச்சகட்ட பாதுப்பு..!!

2 ஏவுகணை தாக்குதலில் தப்பித்த மெக்கா..! சவுதியில் உச்சகட்ட பாதுப்பு..!!

துபாய்:

ஹவுத்தி புரட்சியாளர்களால் ஏவப்பட்ட 2 ஏவுகணையை எதிர்ப்பு ஏவுகணை மூலம் சவுதி அரேபிய ராணுவம் தகர்த்தெறிந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சவுதி அரேபியாவிற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைன்களை புரட்சியாளர்கள் தகர்த்தெறிந்ததில், பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், புரட்சியாளர்கள் வசம் உள்ள ஏமன் தலைநகர் மீது சவுத அரேபிய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் ஹவுத்தி புரட்சியாளர்கள் இன்று அதிகாலை சவுதி அரேபியாவின் டைப், ஜெட்டா நகர் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். தன் நாட்டு மீது வந்த 2 ஏவுகணைகளை சவுதி அரேபிய ராணுவம் இடைமறித்து தகர்த்தெறிந்தது.

இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தருணத்தில், இந்த 2 ஏவுகணைகளும் மெக்கா நகரை நோக்கியே ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, சவுதி அரேபியா முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்