பரவும் தொண்டை அடைப்பான் நோய்

பரவும் தொண்டை அடைப்பான் நோய்

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தை அடுத்த சத்தியமங்கலம் பகுதியில், தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு தற்போது அதிகரித்து வருவதால், தடுப்பூசி போடும்படி அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த தொண்டை அடைப்பான் நோய், டிப்தீரியா என்ற பேக்டீரியா தொண்டையை பாதித்து, சுவாசத்தையும், உணவு விழுங்குவதையும் தடுக்கிறது. முதியோர் மற்றும் சிறுவர்களை தாக்கும்.

இந்த நோயின் தாக்கம் தற்போது கணிசமாக உயர்ந்ததால், கோவை மற்றும் ஈரோடு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு டெட்டணஸ் தடுப்பு ஊசிகளும் போடப்பட்டது.

இந்நிலையில், தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பால், மீண்டும் 36 பேர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களை மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் தடுபூசி போடுமாறு தமிழக அரசு முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்