இலங்கையில் வன்முறை; சமூக வலைதளங்கள் முடக்கம்!

இலங்கையில் வன்முறை; சமூக வலைதளங்கள் முடக்கம்!

சிலா:

இலங்கையில் மதக்கலவரத்தால் வன்முறை நிகழாமல் தடுக்க மீண்டும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள சிலா நகரில் இரு பிரிவினரடையே பேஸ்புக்கில் உருவான வாக்குவாதம் பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள மசூதி மீது கல்வீச்சு நடைபெற்றுள்ளது.

கடந்த மாதம் ஈஸ்டர் நாளில் அந்நாட்டில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு காரணமாக இரு பிரிவினரிடையே தொடர்ந்து மனக்கசப்பு நிலவி வருகிறது.

இதனை வெளிப்படுத்தும் வகையில், இரு பிரிவை சேர்ந்தவர்கள் சிலர் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப்பில் கருத்துகளை பதிவிட்டதன் காரணமாக பயங்கர மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சிலா நகரில் ஊரடங்கு உத்தரவும், நாடுமுழுவதும் சமூக வலைத்தளங்களை முடக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்