காங்கிரஸ் கோட்டையை வீழ்த்திய ஸ்ருமிதி இராணி.! காரணம் இது தாங்க.!

காங்கிரஸ் கோட்டையை வீழ்த்திய ஸ்ருமிதி இராணி.! காரணம் இது தாங்க.!

காங்கிரசில் நேரு குடும்பமே அமேதி தொகுதியில் வேட்பாளராக நிற்பது வழக்கம். கடந்த 1980 ல் சஞ்சய் தேர்வு செய்யப்பட்டார். இவரது மறைவுக்கு பின்னர் 1981ல் ராஜிவ் தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து 1984, 1989, 1991 ல் தொடர்ந்து ராஜிவ் வெற்றி பெற்று எம்.பியானார்.

1996ல் ராகுல் குடும்ப நண்பர் கேப்டன் சதீஷ்சர்மா எம்பி,.யானார். 1998 ல் ஒரு முறை பா.ஜ,. வெற்றி பெற்றது.

இதனையடுத்து தொடர்ந்து 2004, 2009, 2014 ல் ராகுலே எம்.பி.,யானார். இந்த முறை ஸ்மிருதி இராணி வெற்றி பெற்றுள்ளார்.

அவரது வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஸ்மிருதி கடந்த முறை தோல்வி பெற்றாலும், அவர் இந்த தொகுதியில் ஒரு அக்கறையோடு அடிக்கடி சென்று வந்தார்.
அங்குள்ள மக்களுடன் நெருங்கி பழகினார்.

மேலும் இங்குள்ள பா.ஜ., நிர்வாகிகளுடன் சுமுகமாக பழகி மக்கள் தேவைகளை செய்து கொடுத்தார்.

மேலும் இங்குள்ள இளைஞர்கள், மாணவ, மாணவிகள் தேவைகளை அறிந்து உதவி செய்து வந்தார். ஸ்காலர்ஷிப், வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவ உதவிகள் என பல விதங்களில் அவரது உதவி விரிந்தது. இது இளம் வாக்காளர்களை கவர்ந்தது.

மேலும் டில்லிக்கு சென்றால் ஸ்மிருதியை எளிதாக அணுக முடியும் என்ற நிலையையும் ஏற்படுத்தினார். இது போன்ற விஷயங்கள் ஸ்மிருதியின் செல்வாக்கை உயர்த்தியது.
சமீபத்தில் தேர்தலையொட்டி அமேதியில் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டபோது அவரே தண்ணீர் எடுத்து சென்று அணைப்பதும்.

அடி குழாயில் தண்ணீர் அடித்து கொடுத்த வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி ஸ்மிருதியின் மதிப்பை மக்கள் மத்தியில் உயர்த்தியது. ஆனால் ராகுல் இந்த தொகுதி பக்கமே வருவதில்லை என்ற குறை இருந்து வந்தது.

இது போன்ற செயல்களால் ஸ்மிருதி காங்கிரசின் கோட்டையை எளிதில் கைப்பற்றினார். சுமார் 39 ஆண்டுகளாக காங்கிரசின் கைவசம் இருந்த அமேதி தற்போது பா.ஜ.க.விடம் சென்றுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்