சொகுசு விடுதி இடிந்து விழுந்து விபத்து.. 6 ராணுவ வீரர்கள் பலி.!

சொகுசு விடுதி இடிந்து விழுந்து விபத்து.. 6 ராணுவ வீரர்கள் பலி.!

இமாச்சல பிரதேசம்:
இமாச்சல பிரதேசம் சோலான் மாவட்டம் இது சிறந்த சுற்றுலாத்தளமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் நாஹன், குமர்ஹாட்டி சாலையை ஒட்டிய பகுதியில் 4 மாடிகள் கொண்ட சொகுசு விடுதி ஒன்று உள்ளது.

கடந்த சில நாட்களாக இங்கு கனமழை பெய்து வரும் நிலையில் இந்த சொகுசு விடுதி தீடிரென நேற்று இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில், கட்டிட இடிபாடுகளுக்குள் 42 பேர் சிக்கிக் கொண்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இவர்களில் 17 ராணுவ வீரர்கள் உள்பட 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 6 பேர் ராணுவர் வீரர்கள் ஆவர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்