உச்சநீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு

உச்சநீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு

புதுடெல்லி:

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் ஆளுநர் தரவில்லை என உச்சநீதிமன்றத்தில் சிவசேனா சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், 56 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ள 2வது மிகப்பெரிய கட்சியாக சிவசேனா உள்ளது, இருப்பினும் ஆட்சியமைக்க நாங்கள் முன்வைத்த காலக்கெடு கோரிக்கையை நிராகரித்தது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும்.

ஆட்சியமைக்க 10ம் தேதி ஆளுநர் அழைத்தார். 11ம் தேதி அதற்கான விருப்பத்தை நாங்கள் தெரிவித்தோம்.

இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கேட்டிருக்க வேண்டும், ஆனால் எங்களுக்கான வாய்ப்பை அளிக்கவில்லை; இது சட்டவிரோதமானது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்