கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 பேர் கொரோனாவிலிருந்து விடுதலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 பேர் கொரோனாவிலிருந்து விடுதலை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்த 20 பேரில் சூளகிரியை சேர்ந்த 18 பேர் வீடு திரும்பினர்

தமிழகத்திலேயே நீண்டநாட்களாக பச்சை மண்டலத்தில் நீடித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் கோயம்பேடு மார்க்கெட் தொடர்பில் இருந்ததாக சூளகிரி காமராஜ் நகரில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மும்பையிலிருந்து ஒசூருக்கு திரும்பிய 2 பேர் என கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அனைவருக்கும் ஒசூர் இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில்,

20 பேரில் இன்று ஒரே நாளில் சூளகிரியை சேர்ந்த 18 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

18 பேருக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 15 நாட்களுக்கு தேவையான கபசுரக்குடிநீர், விட்டமின் மாத்திரைகள், காய்கறிகள் மற்றும் பூங்கொத்து வழங்கப்பட்டு கைத்தட்டி 18 பேரையும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு வழி அனுப்பி வைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 20 பேரில் ஒரு சிறுவன், ஒரு சிறுமி உட்பட 11 பெண்கள் 6 ஆண்கள் என 18 பேர் வீடு திரும்பி இருப்பதால் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மும்பையிலிருந்து வந்த 2 பேருக்கு கொரோனா வார்டில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவர்களின் உடல் நிலையிம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் மீண்டும் பச்சை மண்டலத்திற்கு திரும்பும் மகிழ்ச்சியான சூழல் ஏற்ப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்