‘‘எகிப்து வெங்காயம் இதய நோயாளிக்கு நல்லது’’

  • In Chennai
  • December 12, 2019
  • 207 Views
‘‘எகிப்து வெங்காயம் இதய நோயாளிக்கு நல்லது’’

சென்னை:

எகிப்து வெங்காயம் சாப்பிடுவது இதய நோய்க்கும் சர்க்கரை நோய்க்கும் நல்லது அமைச்சர் செல்லூர்ராஜு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, கடந்த ஒரு மாதத்தில் 34 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மூலம் விற்கப்பட்டுள்ளதாகவும், மத்திய தொகுப்பிலிருந்து முதல்கட்டமாக எகிப்து வெங்காயம் 500 டன் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், எகிப்து வெங்காயத்தை முதல்வர் ருசித்து பார்த்து அதன் தரத்தை உறுதி செய்துள்ளார் எனவும், தொடர்ந்து பேசிய அவர் எகிப்து வெங்காயம் சாப்பிடுவது இதய நோய்க்கும், சர்க்கரை நோய்க்கும் நல்லது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்