மும்பை ஓட்டலை சுற்றி 144 தடை உத்தரவு!

மும்பை ஓட்டலை சுற்றி 144 தடை உத்தரவு!

மும்பை:

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் ஓட்டல் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு, கர்நாடக காங்., அமைச்சர் டி.கே.சிவக்குமார் அங்கு விரைந்துள்ளார்.

அதிருப்தி எம்எல்ஏக்கள் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக ஓட்டலில் கோஷமிட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் அசாம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்க ஓட்டலை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்