2ம் குண்டு கண்டுபிடிப்பு; 50,000 பேர் வெளியேற்றம்

  • In General
  • December 17, 2019
  • 194 Views
2ம் குண்டு கண்டுபிடிப்பு; 50,000 பேர் வெளியேற்றம்

இத்தாலி:

இத்தாலியில் 2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் பிரிண்டிசி நகரில் உள்ள திரையரங்கு ஒன்றை சீரமைப்பு பணிகள் மேற்கொண்டபோது சக்திவாய்ந்த வெடிகுண்டு தென்பட்டது. அந்த வெடிகுண்டு 2ம் உலகப்போரின்போது 1941ம் ஆண்டில் வீசியிருக்கலம் என கருதப்படுகிறது.

அந்த வெடிகுண்டு செயலிழக்கப்படாத ஒரு மீட்டர் நீளமும், 40 கிலோ டைனமைட் வெடிபொருட்களுடனும் இருந்தது. இதனையடுத்து, பாதுகாப்பு கருதி 50,000க்கும் மேற்பட்டோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

வெடிகுண்டு கண்டறியப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 1,500 மீட்டர் பரப்பளவுக்கு அனைத்து பகுதிகளும் மூடப்பட்டன. பிரிண்டிசி விமான நிலையம், ரயில் நிலையம், 2 மருத்துவமனைகளும் மூடப்பட்டன. பிரிண்டிசி சிறையில் இருந்த 200 கைதிகள், அருகே உள்ள லீசி சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு வெடிகுண்டு செயலிழந்ததாக அதிகாரிகள் கூறியதையடுத்து, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு மற்றொரு வெடிகுண்டு செயலிழக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்