உண்ணாவிரதம் தற்காலிமாக நிறுத்தி வைப்பு

உண்ணாவிரதம் தற்காலிமாக நிறுத்தி வைப்பு

திருவண்ணாமலை:
5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வந்தது.

இதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போன்று ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜவ்வாது மலை, ஜமுனாமரத்தூர் உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியை மகாலட்சுமி நேற்று உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார்.

இந்நிலையில், அரசு 3 வருடங்களுக்கு பொதுத்தேர்வு முறை ரத்து செய்யப்படும் என்று அறிவித்தன.

இதனை முன்னிட்டு தற்காலிகமாக தனது உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஏதோ ஓர் அவசரத்தில் எடுத்த முடிவாக இந்த தொடர் போராட்டத்தை நான் அறிவிக்கவில்லை.

தடாலடியாக அரசாணைகள் வெளியிடப்படுவது சமீப வருடங்களில் நிகழ்ந்து வருகிறது. கல்வி தொடர்பாக வரும் அரசாணைகள், ஒட்டுமொத்த குழந்தைகளையும் உளவியல் ரீதியாக பாதிக்கும்.

குரலற்றக் குழந்தைகளின் குரலை இந்த சமூகத்துக்கு நான் வெளிப்படுத்தியதாக வேண்டிய அவசியமிருந்தது.

அதன் பொருட்டே நான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தேன். அரசு தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவதில்லை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

என் குழந்தைகள் மற்றும் சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுகிறேன். இது தற்காலிகமானதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்