காஷ்மீர் லடாக் பகுதியில் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்

காஷ்மீர் லடாக் பகுதியில் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்

லடாக்:
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது நாசவேலையில் ஈடுபட பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.

இதனையடுத்து ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீப காலத்தில் இல்லாத வகையில் 1 லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை முன்னிட்டு ஜம்முவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதே வேளையில், காஷ்மீரின் லடாக் பகுதியில் கோடை கால விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் மீண்டும் வழக்கம் போல் திறக்கப்படும்.

இதேபோன்று கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களிலும் வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும். இந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்