பள்ளிப் பேருந்து விபத்து

பள்ளிப் பேருந்து விபத்து

ஒசூர்:

ஓசூர் அருகே மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பள்ளி வாகனம் சாலையில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள் உள்பட பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பள்ளி வாகனம் லாரி மீது மோதாமல் இருக்க சாலையோரத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி மாணவர்கள், ஓட்டுநர், கிளிநர் என ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

ஓசூர் அருகேயுள்ள அளேசீபம் கிராமத்திலிருந்து இன்று காலை தனியார் பள்ளி வாகனம் ஒன்று பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு ஓசூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்த வாகனத்தில் 13 பள்ளி மாணவர்கள் ஓட்டுநர், கிளீநர் என 15 பேர் பயணம் செய்தனர். அப்போது பீர்ஜேப்பள்ளி கிராமத்தின் அருகே பள்ளி வாகனம் சென்றபோது திடீரென எதிர் திசையிலும், பின்புறத்திலும் லாரிகள் வந்துள்ளன.

அப்போது பள்ளி வாகனம் லாரிகள் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் முனிராஜ் பள்ளி வாகனத்தை சாலையோரத்தில் இறக்கியுள்ளார். இதில் பள்ளி வாகனத்தில் இருந்த 4 பள்ளி மாணவர்கள், ஓட்டுநர் கிளீநர் என 6 பேர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற உத்தனப்பள்ளி போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓசூர் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்னர் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்