பயிற்சி இயந்திரங்கள் தான்

பயிற்சி இயந்திரங்கள் தான்

சென்னை:

நாங்குநேரியில் மின்னணு வாக்கு இயந்திரம் மாற்றியது பயிற்சிக்கான இயந்திரங்கள் தான் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

நாங்குநேரியில் வாக்கு இயந்திரங்கள் மாற்றியதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தலை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, நாங்குநேரியில் மின்னணு வாக்கு இயந்திரம் மாற்றியது குறித்து, ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார்.

மாற்றப்பட்ட இயந்திரம் வாக்குபதிவிற்கானது அல்ல. பயிற்சிக்கான இயந்திரங்கள் தான். அரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்