சென்னை:
காமெடியில் கலக்கி மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் சதீஷ், தற்போது ஒரு படத்திற்க பாடலையும் பாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக தனக்கென ஒரு இடத்தை மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கும் நடிகர் சதீஷ், தற்போது ரஜினிகாந் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். அவர் தற்போது பாடகராகவும் அறிமுகமாகவுள்ளார்.
இந்நிலையில், அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் ராஜவம்சம். இதில் நாயகியாக நிக்கி கல்ரானி நடிக்கிறார். இப்படத்தில் சசிகுமாருடன் விஜயகுமார், தம்பி ராமையா, மனோபாலா, ராஜ்கபூர், சிங்கம்புலி, ரேகா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சித்தார்த் ராமசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
ராஜவம்சம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த டீஸரை வெளியிட்டுள்ளனர். கூட்டு குடும்பத்தின் மகிமையை எடுத்துரைக்கும் விதமாக இந்த படம் உருவாகி வருகிறது.