சேலத்தில் 5 திரையரங்குகளுக்கு சீல்..!

சேலத்தில் 5 திரையரங்குகளுக்கு சீல்..!

சேலம்:

சேலம் மாநகரில் வரி செலுத்தாத 5 திரையரங்குகளுக்க மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சேலத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சுமார் 25 திரையரங்குகள் செயல்பட்டு வருகின்றன. இந்த திரையரங்குள் 30 சதவீத கேளிக்கை வரியை ஆண்டுதோறும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். ஆனால் 22 திரையரங்குகள் தங்களது வரியை இதுவரை செலுத்தவில்லை.

சேலம் மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு நினைவூட்டல் கடிதமும் அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பிறகும் திரையரங்க உரிமையாளர்கள் வரி செலுத்தவில்லை.

இந்நிலையில், முதற்கட்டமாக சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள 5 திரையரங்குகளுக்கு சேலம் மாநகராட்சி உதவி ஆணையர் ராஜா தலைமையிலான அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். இதனால் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்