விஜய் சேதுபதி படத்தில் சச்சின்

  • In Cinema
  • August 1, 2019
  • 200 Views
விஜய் சேதுபதி படத்தில் சச்சின்

சென்னை:

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘800’ என பெயரிடப்பட்டுள்ளது. முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளதால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கும் இந்த படம் தமிழில் உருவாகி பல மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும், தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் இந்த படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் ஒருசில காட்சியில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்