சச்சினை கலாய்த்த ஐசிசி..! கமெண்ட்டுக்கு பதிலடி..!!

  • In Sports
  • May 16, 2019
  • 212 Views
சச்சினை கலாய்த்த ஐசிசி..! கமெண்ட்டுக்கு பதிலடி..!!

தன்னுடைய பவுலிங்கை, அம்பயர் படத்துடன் டுவிட்டரில் கிண்டல் செய்த ஐசிசி.,க்கு பதிலடி கொடுத்துள்ளார் சச்சின்.

சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்லியுடன் வலைபயிற்ச்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை தன்னுடைய துவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், நீண்ட நாட்களுக்கு பிறகு பயிற்சியில் ஈடுபடுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது எங்களை சிறுவயதுக்கே அழைத்து சென்றது என பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சச்சின் பவுலரின் லைனை தாண்டி பந்து வீசினார். அதை நோபால் என அம்பயன் ஸ்டீவ் பக்னர் படத்துடன் சுட்டிக்காட்டி ஐசிசி கமெண்ட் செய்திருந்தது.

சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்த போது அம்பயர் ஸ்டீவ் பக்னர் பல முறை தவறான முடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘இந்த முறையாவது நான் பேட்டிங் செய்யாமல் பவுலிங் செய்கிறேன். நடுவரின் முடிவே இறுதியானது’ என்று சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்