அதிக ரன்கள் வரிசையில் சச்சினுக்கு 5 இடமா?

  • In Sports
  • May 10, 2020
  • 162 Views
அதிக ரன்கள் வரிசையில் சச்சினுக்கு 5 இடமா?

2001 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது ஐசிசி.

இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் 19,718 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இலங்கை அணியின் குமார் சங்ககாரா 17,069 ரன்களுடன் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணியின் காலிஸ் 16,712 ரன்களுடன் இருக்கிறார்.

இதேபோல் இலங்கை அணியில் மஹேலா ஜெயவர்தனே 16,269 ரன்களுடன் 4 ஆவது இடத்திலும், இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் 15,825 ரன்களுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளார்.
ஆனால் ஓட்டுமொத்தமாக தன் வாழ்நாட்களில் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் – 18,426
குமார் சங்ககாரா – 14,234
ரிக்கி பாண்டிங் – 13,704
சனத் ஜெயசூர்யா – 13,430
மஹேல ஜெயவர்தனே – 12,650.

இதேபோல் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் – 15,921
ரிக்கி பாண்டிங் – 13,378
காலிஸ் – 13,289
ராகுல் டிராவிட் – 13,288
அலஸ்டியர் குக் – 12,472

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்