7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

புதுடெல்லி:

சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் மீது, ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பில், அனைத்து வயது பெண்களும் செல்லலாம் – 2018 செப். 28ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பெண்கள் அனுமதிக்கான முந்தைய தீர்ப்புக்கு தடையில்லை. தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கிய பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு தடையில்லை. கோயில், மசூதி, தேவாலயம் என எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்களது வழிபாட்டு உரிமையை பறிக்கக் கூடாது. மதம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. மற்ற மதங்களில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகள் குறித்து இந்து அமைப்புகளின் மனுதாரர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மத வழிபாடு, நம்பிக்கை என்ற பெயரில் பாகுபாடு கூடாது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், மீண்டும் விவாதம் நடத்த வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் அடிப்படையில், 5ல் 3 நீதிபதிகள் முடிவு காரணமாக 7பேர் அமர்வுக்கு சபரிமலை வழக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்