பிரபாஸின் ‘சாஹோ’ டீசர் வெளியீடு..!

  • In Cinema
  • June 13, 2019
  • 308 Views
பிரபாஸின் ‘சாஹோ’ டீசர் வெளியீடு..!

சென்னை:

நடிகர் பிரபாஸின் ‘சாஹோ’ படத்தின் டீசர் இன்று வெளியிட்டுள்ளனர்.

பாகுபலி பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து, பிரபாஸ் ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக ஷரத்தா கபூர் நடிக்கிறார்.

ரூ.150 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தை யூவி என்டர்டெய்ன்மென்ட்ஸ் தயாரிக்கிறது. நடிகர் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகிவரும் ‘சாஹோ’ படத்தின் புரமோக்கள் கடந்த சில நாட்களுக்குமுன் வெளியிட்டிருந்தன. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் வெளியிடப்படவுள்ளதாக பிரபாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரபாஸ் நடித்துவரும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இணையத்தில் தற்போது வேகமாக பார்க்கப்பட்டு வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்