பிரபாஸின் ‘சாஹோ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • In Cinema
  • May 21, 2019
  • 192 Views
பிரபாஸின் ‘சாஹோ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சென்னை:

நடிகர் பிரபாஸின் ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

பாகுபலி பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து, பிரபாஸ் ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக ஷரத்தா கபூர் நடிக்கிறார்.

ரூ.150 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தை யூவி என்டர்டெய்ன்மென்ட்ஸ் தயாரிக்கிறது. நடிகர் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகிவரும் ‘சாஹோ’ படத்தின் புரமோக்கள் வெளியிட்டுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் வெளியிடப்படவுள்ளதாக பிரபாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்