உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த ரஷ்யா.. புடின் முக்கிய அறிவிப்பு

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த ரஷ்யா.. புடின் முக்கிய அறிவிப்பு

கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கும் போட்டிகளுக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார், இது உலகின் முதல் தடுப்பூசி என்று கூறப்படுகிறது

உலகெங்கிலும் கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்பு விகிதங்கள் கடுமையாக உயர்ந்து வருகிறது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது பெரிய கொரோனா பாதிப்புக்கு உள்ளான நாடாக ரஷ்யா உள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பந்தயத்தில் உலகின் அனைத்து நாடுகளையும் முந்த விரும்பிய ரஷ்யா, இன்று ( ஆகஸ்ட் 12 ஆம் தேதி) க்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் வெளியிட்ட உலகின் முதல் நாடாக பதிவு செய்துள்ளது.அக்டோபரில் பயன்பாடு
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசி சோதனை கட்டமாக பொதுமக்களுக்கு இன்று முதல் போடப்படுகிறது. மருத்துவ வல்லுநர்கள் மற்றும் முதியவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட உள்ளது..அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்தப்பட்ட பின்னர் தடுப்பூசியின் செயல்திறன் தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் அக்டோபரில் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஏற்கனவே ரஷ்யா கூறியிருந்தது.

புடின் அறிவிப்பு

இந்நிலையில் கொரோனோவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளோம் என ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் தனது சொந்த மகளுக்கே புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் புடின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

திறம்பட செயல்படுகிறது

சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோவிடம் தடுப்பூசி குறித்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்ட புடின். “இது மிகவும் திறம்பட செயல்படுகிறது” என்பதும், “நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது” என்பதும் தனக்குத் தெரியும் என்றார்.

முக்கியமான படி

“இன்று காலை, உலகில் முதல் முறையாக, புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி பதிவு செய்யப்பட்டது” என்று கூறிய புடின், கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியில் பணியாற்றிய அனைவருக்கு நன்றி தெரிவித்தார், மேலும் இது “உலகிற்கான மிக முக்கியமான படி” என்று விவரித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்