ஒசூர் பகுதிகளில் தேசிய ரூர்மன் மிஷன்

ஒசூர் பகுதிகளில் தேசிய ரூர்மன் மிஷன்

ஒசூர் அருகே, கிராமங்களில் பழமை மாறாமல் நகர்ப்புற வசதிகளை வழக்கும் “தேசிய ரூர்பன் மிஷன்” திட்டத்தின் நான்காவது ஆண்டை கொண்டாடும் வகையில் அரசு பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

மத்திய அமைச்சகத்தால் “ஷ்யாம் பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன்” திட்டம் 16.09.2015 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு 06.11.2015 முதல் செயல்படுத்தி வருகிறது. மேலும் இத்திட்டம் தற்போது “நேஷனல் ரூர்பன் மிஷன்” என அழைக்கப்படுகிறது.

ஊரகப் பகுதிகளின் சமூக பொருளாதார வளர்ச்சியினை நகர்ப்புற பகுதிக்கு இணையாக உயர்த்தும் பொருட்டு இந்திய அரசு இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் கிராம ஊராட்சிகள் தொகுப்பு கிராம ஊராட்சிகளாக செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் 300 கிராம ஊராட்சிகளின் சமூக பொருளாதார வளர்ச்சியினை நகர்ப்புற பகுதிக்கு இணையாக உயர்த்தி திட்டமிடப்பட்டு செயல்படுத்தி வருகிறது.

தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அலசப்பள்ளி பட்வாரப்பள்ளி தொகுப்பு கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு 2018 முதல் 2021 வரை 3 ஆண்டுகளுக்கு பணிகள் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பாகலூர், அலசப்பள்ளி,பட்டவரப்பள்ளி உள்ளிட்ட 6 ஊராட்சி கிராமங்களில் நகர்ப்புறங்களில் உள்ள வசதிகள் ஏற்ப்படுத்தி தரப்பட உள்ளதால்

பாகலூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கிராமங்களில் தொழிற்சாலைகள் என்கிற தலைப்பில் ஓவியப்போட்டியை ஒசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆப்தாப் பேகம் தொடங்கி வைத்த பின்பு

மாணவிகளின் சார்பில் மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்டவையை வலியுறுத்தி பாகலூரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்