வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.10 லட்சம் -முதல்வர்

வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.10 லட்சம் -முதல்வர்

சென்னை:

நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழிந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு உடனடி மீட்பு, நிவாரணப்பணிகளில் ஈடுபட மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகளில் மாநில, தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, ராணுவம் உள்ளிட்ட துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலம், கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 1704 பேர் 28 பேரிடர் மீட்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், நிலச்சரிவு, இடிபாடுகளை சீர் செய்ய 29 ஜேசிபி இயந்திரங்களும், நோய்களை தடுக்க 23 நிலையான மற்றும் 13 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மற்றும் 30 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நீலகரி மாவட்டத்தில் உயிரிழந்த சென்னன், விமலா, சுசீலா, பாவனா, அமுதா ஆகிய 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்