சோதனையில் ரூ.949 கோடி; தமிழகம் முதலிடம்!

சோதனையில் ரூ.949 கோடி; தமிழகம் முதலிடம்!

புதுடெல்லி:

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் ரூ.3,399.33 கோடி ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.949.03 கோடி பறிமுதல் செய்யப்பட்டு தமிழகம் முதலிடம் வகிக்கிறது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, காணொலி காட்சி மூலம் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தெரிவிக்கையில், தேர்தலில் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், நாடுமுழுவதும் பறக்கும் படைகள் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத பணம் மற்றும் பொருட்களை கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 3,399.33 கோடி ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

டில்லியில் ரூ.420.94 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 949.03 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு முதலிடம் வகிக்கிறது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்