ஒசூரில் ரூ.3 லட்சம் பறிமுதல்

ஒசூரில் ரூ.3 லட்சம் பறிமுதல்

ஒசூர்:

ஓசூரில் புதுநகர் வளர்ச்சி குழும அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.3 லட்சம் சிக்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி நேதாஜி சாலையில் உள்ள ஓசூர் புதுநகர் குழும அலுவலகத்தில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, உறுப்பினர் செயலர் யோகராஜ் என்பவரின் இடைத்தரகர்கள் வினோத் மற்றும் பொன்ராஜ் என்பவர்களிடமிருந்து ரூ.1,80,070 மற்றும் யோகராஜிடமிருந்து கணக்கில் வராத ரூ.1,28,000 லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உரிய ஆவணங்களின்றி லஞ்சம் பெற்று லே அவுட்டுகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக வந்த ரகசிய தகவலின்பேரில், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர், சுமார் 6 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் மேலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சோதனையில், இடைத்தரகர்கள் மற்றும் உறுப்பினர் செயலரிடமிருந்து மொத்தம் ரூ.3,00,870 கைப்பற்றியுள்ள நிலையில், யோகராஜ் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்