ரூ.24க்கு வெங்காயம்; நாளை முதல் விற்பனை

ரூ.24க்கு வெங்காயம்; நாளை முதல் விற்பனை

புதுடெல்லி:

டெல்லியில் அரசு சார்பில் பொதுமக்களுக்கு நாளை முதல் ரூ24க்கு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

நாடுமுழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்ததை தொடர்ந்து மாநில அரசுகள் மலிவு விலையில் வெங்காயத்தை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

டெல்லியில் கிலோ ரூ.24க்கு அரசு சார்பில் வேன்களில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜிரிவால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் நாளை முதல் கிலோ ரூ.24க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அர்விந்த் கேஜிரிவால் இன்று தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்